#BigBreaking:விராட் கோலி 1,019 நாட்களுக்குப் பிறகு சதம்,அதுவும் முதல் டி20 சதம்; ஆப்கானிஸ்தான் 212 இலக்கு
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் க்கு இடையின நடைபெற்ற ஆசிய கோப்பையில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நிதானமாக விளையான்டாலும் விராட்கோலியின் அதிரடியால் இமயம் நோக்கி பாய்ந்தது அவர் அடித்த பந்துகள்.
தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய கேஎல் ராகுல்(62) ரன்களுக்கு ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ்(6) ஆட்டமிழந்தார்.பின்னர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ரிஷப் பந்த்(20) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
2022 ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய விராட் கோலி முதல் டி20 சதத்தை விளாசினார், 53 பந்துகளில் எட்டினார்.
விராட் கோலி 61 பந்துகள் சந்தித்து 122 ரன்களை எடுத்து 1,019 நாட்களுக்குப் பிறகு கோஹ்லி சர்வதேச சதம் அடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் 71 சதங்களை கோஹ்லி சமன் செய்துள்ளார்.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்துள்ளது.