இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்தப் பயணத்தில் முதலில் நடைபெற்ற டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.
இதற்காக கடந்த 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை பயிற்சி போட்டி நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிந்தது.இந்நிலையில் இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.இப்போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடித்தால் கேப்டனாக அதிக சதம் அடித்த ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்வார். இந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் டெஸ்டில் அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த இந்திய முன்னாள் கேப்டன் தோனி சாதனையை சமன் செய்வார்.
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…