“மேக்ஸ்வெல்லை ப்ளாக் செய்த கோலி”..வெளியான ஷாக்கிங் தகவல்! காரணம் இதுதான்!
2021 ஐபிஎல் ஏலத்தில் கோலி தான் தன்னை பெங்களூரு அணிக்கு கொண்டு வந்ததாக கிளென் மேக்ஸ்வெல் அவரது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
சிட்னி : ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், தற்போது ‘ஷோமேன்’ என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில், மேக்ஸ்வெல் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த ஸ்வாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து விரிவாக எழுதி இருக்கிறார்.
அந்த புத்தகத்தில், விராட் கோலியுடன் ஏற்பட்ட சண்டைக் குறித்தும் தெரிவித்திருக்கிறார். அதைக் குறிப்பிட்டுச் சொன்னால், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்காக இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடியது.
அப்போது, ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்டில், முதலில் இந்திய அணி பீல்டிங் செய்து வந்தது. அப்போது, விராட் கோலிக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விராட் கோலியின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தைக் குறித்து கிளென் மேக்ஸ்வெல் நடித்துக் காட்டி, கோலியைச் சீண்டிக் கொண்டே இருந்தார்.
மேலும், அதிலிருந்து இரு அணி வீரர்களும் மாறிமாறி முறைத்துக் கொண்டே தான் விளையாடினார்கள். இந்த நிலையில், அன்றைய தினம் மேக்ஸ்வெல் அப்படி வெறுப்பு ஏற்றியதால், மேக்ஸ்வெலை இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளத்தில் விராட் கோலி பிளாக் செய்துள்ளார்.
இதனைத் தெரிந்து கொண்ட மேக்ஸ்வெல், இது தொடர்பாக மறுநாள் கோலியிடம் சென்று, ‘என்னை இவ்வாறு பிளாக் செய்தீர்களா’ எனக் கேட்டிருக்கிறாராம். அதற்கு, கோலியும், ‘ஆம்’ எனக் கூறி இருக்கிறார்.
மேலும், இவ்வாறு சண்டை நடந்தப் பிறகு, 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கோலி தான் தன்னை ஆர்சிபி அணிக்குக் கொண்டு வந்ததாகவும், தன்னை ஆர்சிபி அணி வாங்கியப் பிறகு, ஆர்சிபியிலிருந்து வந்த முதல் வாழ்த்து கோலியுடையது தான் எனவும் அந்த புத்தாக்கத்தில் மேக்ஸ்வெல் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின், ஆர்சிபிக்கு வந்த பிறகு அந்த பழைய சண்டையெல்லாம் மறந்து ஏதோ நீண்ட கால நண்பரிடம் பழகுவது போல் கோலி என்னிடம் பழகினார், என்றும் அந்த புத்தகத்தில் மேக்ஸ்வெல் விளாவாகியாக எழுதியிருக்கிறார். இந்த சம்பவம் ஆர்சிபி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.