முதல்பயிற்சி ஆட்டத்தில் தோற்ற இந்தியா..! என்ன குழப்பம் நிலவியது கோலி விளக்கம்
2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை திருவிழா இங்கிலாந்தில் வரும் 30 தேதி தொடங்குகிறது.
உலககோப்பை போட்டியில் 10 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கு கொண்டு விளையாடுகிறது.இந்த அணிகளுக்கான பயிற்சி ஆட்டம் தற்போது தொடங்கி உள்ளது.
இங்கிலாந்து சென்ற இந்திய அணியின் முதல் பயிற்சி ஆட்டம் நேற்று நடைபெற்றது.இதில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் 39.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்னில் சுருண்டது.
நியூசிலாந்து தரப்பில் ஆடிய பேட்ஸ்பேன்களின் நிதானமான ஆட்டத்தால் அந்த அணி 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
உலககோப்பையில் இந்திய மேற்கொள்ளும் முதல் பயிற்சி ஆட்டம் என்பதால் இதில் தோல்வி அடைந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்தது.
இந்த தோல்வி குறித்து அணியின் கேப்டன் கோலி கூறுகையில், ஆட்டத்தில் நாங்கள் திட்டமிட்டு ஆடவில்லை.எங்கள் முன் கடுமையான சவால்களாக இருந்தன இங்கிலாந்தின் சில இடத்தில் உள்ள தட்பவெட்பம் மற்றும் ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றை எதிர்பார்க்கவில்லை.50 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட் என்ற நிலை இந்தியாவிற்கு ஆனாலும் 180 ரன்கள் இலக்காக நிர்ணாயித்தது நல்ல முயற்சியே.
உலககோப்பை தொடர் மிகவும் முக்கியமானது அதில் முன் பேட்ஸ்மேன்கள் ஆடாத போது பின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது அவசியமாகும் அவர்கள் இங்குள்ள மைதானத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.ஜடேஜாவின் ஆட்டம் நம்பிக்கை அளித்தது.மேலும் எங்களின் பந்து வீச்சு நன்றாக இருந்தது என்று தெரிவித்தார் .