பெங்களூர் அணிக்கு கேப்டனாக கோலியே இருப்பார்..! பயிற்சியாளர் சைமன் காடிச்..!
உள்ளூர் போட்டியான ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் நீக்கப்பட்டு சைமன் காடிச் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த நியூஸிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் பெங்களூர் அணியின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தோல்விகளை சந்தித்து வரும் அணிகளின் கேப்டன் மாற்றப்பட்டு வருகின்றனர். இதனால் பெங்களூர் அணிக்கு புதிய கேப்டன் மாற்றப்படுவார்களா? என சைமன் காடிச்சிடன் கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த சைமன், கண்டிப்பாக பெங்களூர் அணிக்கு கேப்டனாக கோலி தான் வரும் ஐபிஎல் டி20 தொடரிலும் இருப்பார் என கூறினார்.
ஏழு வருடங்களாக கோலி பெங்களூர் அணிக்கு கேப்டனாக உள்ளார். இவருக்கு அனுபவம் அதிகம் உள்ளது. அணியில் முதலில் எந்த வீரர்கள் எந்த இடத்தில் பேட்டிங் இறங்குவார்கள். எப்படி பந்து வீசுவார்கள் என தெரிந்து அதற்கு ஏற்றார்போல் பயிற்சி கொடுக்க உள்ளோம் என கூறினார்.