ஒரு அரை சதத்தில் இரண்டு சாதனை புரிந்த கேப்டன் கோலி !
நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில்143 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கி நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடி 82 பந்தில் 72 ரன்கள் கோலிகுவித்தார்.இப்போட்டியில் 50 ரன்னிற்கு மேல் அடித்ததன் மூலம் உலககோப்பையில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் 50 ரன்னிற்கு மேல் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன் இந்திய வீரர் நவ்ஜோத் சித்து 1987 , சச்சின் 1996, 2003 ஆகிய உலகக்கோப்பையில் தொடர்ந்து நான்கு போட்டிகளில் 50 ரன்னிற்கு மேல் அடித்து இருந்தனர்.அதன் பிறகு தற்போது கோலி தொடர்ந்து நான்கு போட்டியில் 50 ரன்னிற்கு மேல் அடித்து உள்ளார்.
மேலும் உலககோப்பையில் தொடர்ந்து நான்கு போட்டியில் 50 ரன்னிற்கு மேல் அடித்த கேப்டன்களில் 3-வது கேப்டன் என்ற பெருமையை படைத்தார்.இதற்கு முன் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் கிரேமி சுமித் 2007 உலககோப்பையிலும் , ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் நடப்பு உலககோப்பையில் தொடர்ந்து நான்கு போட்டியில் 50 ரன்னிற்கு மேல் அடித்தனர்.
தற்போது இந்திய அணியின் கேப்டன் கோலி மூன்றாவதாக இடம் பிடித்து உள்ளார்.