கோலி மனிதரே இல்லை , ஒரு மிஷின் -பிரைன் லாரா
உலக கோப்பை தொடர் மே 30-ம் தேதி தொடங்க உள்ளது.இந்திய அணி கேப்டன் கோலி தலைமையில் விளையாட உள்ளது .இந்நிலையில் கேப்டன் விராட் கோலி பற்றி லாரா சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.அவர் கூறுகையில் , 80 மற்றும் 90 களிலும் இருந்த கிரிக்கெட் வீரர்களை காட்டியும் சற்று வித்தியாசமான வீரராக கோலி உள்ளார்.
மேலும் கோலி, தனது உடல் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கோலி மனிதரே இல்லை அவர், ஒரு ரன் மிஷின் என பிரைன் லாரா கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய பிரைன் லாரா, சச்சின் உடன் கோலியை ஒப்பிட முடியாது ஆனால் கோலி பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு முன் உதாரணமாக உள்ளார் என கூறினார்.