#BREAKING : ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கம்..!

டி20-ஐ தொடர்ந்து இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
இந்திய அணியின் டி20 கேப்டன்னாக ரோகித் சர்மா தற்போது செயல்படுகிறார். அதேநேரத்தில் விராட் கோலி வழக்கமாக ஒருநாள் மற்றும் டெஸ்டில் தனது கேப்டன் ஷிப் செய்து வந்தார். நியூசிலாந்து தொடரை சிறப்பாக முடித்த இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் மோத உள்ளது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், கேப்டனாக கோலியும், துணை கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலியின் பேட்டிங் மிகவும் மந்தமாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் சமீபத்தில் டி20 அணிக்கான கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பதவியிலும் தொடர்ந்து நீடிப்பாரா..? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டுள்ளார்.
The All-India Senior Selection Committee also decided to name Mr Rohit Sharma as the Captain of the ODI & T20I teams going forward.#TeamIndia | @ImRo45 pic.twitter.com/hcg92sPtCa
— BCCI (@BCCI) December 8, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025