கோகினூர் வைரத்தை மீட்டு வாருங்கள் கோலி..!கொக்கரிக்கும் ரசிகர்கள்

Default Image

உலக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.இதில் அணிகள் போட்டியில் ஒன்றோடு ஒன்று எதிர்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த போட்டியானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அணி கேப்டன்கள் எல்லாம் நேற்று முன்தினம் இங்கிலாந்து அரச குடும்பத்தினரை சந்தித்து உரையாற்றினர்.

இந்த சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி பங்கு கொண்டு இருந்தார்.இங்கிலாந்து  இளவரசர் ஹேரி மற்றும் இங்கிலாந்தின் ராணி  எலிபெத் ,கோலி ஆகியோர்களுக்கு இடையே  சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

Related image

இந்தியாவின் பொக்கிஷம் என்று அழைக்கப்படும் கோகினூர் வைரம் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கொல்லூர் என்ற இடத்தை பிறப்பாக கொண்டது.இது 105 கேரட் மற்றும் 21.6 கிராம் கொண்டது.இந்திய வரலாற்றில் நடந்த ஆட்சி மாற்றத்தின் போது  இந்து ,முகலாயர்,ஆப்கன்,சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் கைபற்றப்பட்டது. நாட்டின் வளத்தை சுரண்டியதொடுமட்டுமல்லாமல் இந்திய போக்கிஷத்தையும் களவாடி சென்றனர்.

Image result for கோகினூர் வைரம்

கோகினூர் வைரம் விக்டோரிய மகாராணியை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த போது பிரிட்டிஷின் ஆபரணத்தின் ஒரு பகுதியாக ஆனது.இதனை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை இந்திய மேற்கொண்ட  நிலையிலும் அதில் தோல்வியே கிடைத்தது.

Related image

இந்நிலையில் இவர்களின் சந்திப்பு புகைபடங்களை கண்டு கோலியின் ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ட்விட்டரில் இங்கிலாந்து ராணியிடம் இருந்து கோகினூர் வைரத்தை மீட்டு இந்தியா கொண்டு வாருங்கள் கோலி என்று குறிப்பிட்டு தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வந்தனர்.

Related image

இந்நிலையில் தான் ரசிகர்கள் தங்களது ஆதங்களையும்  அது எங்களது  பாரம்பரிய சொத்து அதை நாங்கள் உங்களிடம் இருந்து திரும்ப பெற்றே தீருவோம்  என்று கட்டமாக தெரிவித்து வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்