இதர வீரர்களிடம் விராட் கோலி, பிட்னஸ், உடற்பயிற்சி, சிறப்பான பீல்டிங் உள்ளிட்ட பலவற்றை விராட் கோலி எதிர்பார்ப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அனைத்து தலைமை பயிற்சியாளர்களைவிட ரவி சாஸ்திரி, மிக சிறந்த சாதனையைப் படைத்துள்ளார். அவரிடம் பயிற்சி பெற்றுவரும் இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது. மேலும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ஒரு கேப்டனாக விராட் கோலி, தனது பணியை சிறப்பாக செய்து வருவதாக கூறினார். ஒரு கேப்டனாக அவர் அணியை நாளுக்கு நாள் சிறப்பாக வழிநடத்திச் செல்வது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், அவரின் பணியை சிறப்பாக செய்வதில் எந்தவொரு ஆசிரியமும் இல்லையென கூறினார்.
மேலும் இதர வீரர்களிடம் விராட் கோலி, பிட்னஸ், உடற்பயிற்சி, சிறப்பான பீல்டிங், இது சரியல்ல, அது தவறு போன்ற சாக்குப்போக்குகள் கூறாமல் இருப்பதை கேப்டன் விராட் கோலி எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் மிகவும் வியப்பாக உள்ளதாகவும், அவரின் கடின உழைப்பால் மட்டுமே அவர் தனது பேட்டிங்கை வலுப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, இனி வரும் தமிழக அணிக்கான அனைத்து போட்டிகளிலும் அவர் நிச்சயம் டாப் 4-ல் விளையாட வேண்டும் என்றும், இதுகுறித்து நான் பேசவேண்டியது நேர்ந்தால், தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கிடமும், அணியின் அதிகாரிகளிடமும் பேச தயார் என்று கூறினார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…