சர்வதேச டி20 போட்டிகளில் அதிகம் அரைசதமடித்த ரோஹித் சர்மாவின் சாதனையை கேப்டன் விராட் கோலி சத்தம் போடாமல் சமன் செய்துள்ளார்.
சிட்னியில் இன்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – தவான் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இவர்களை தொடர்ந்து கேப்டன் கோலி அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தை பூர்த்திசெய்தார். பின்னர் 85 ரன்கள் அடித்து கோலி தனது விக்கெட்டை இழந்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எட்ட முடிந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற்றது. டி20 தொடரின் நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை சத்தம் போடாமல் விராட் கோலி சமன் செய்துள்ளார். கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் தலா 25 அரைசதங்கள் அடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து 19 அரைசதங்களுடன் டேவிட் வார்னர் 3ம் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…