விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி சிறந்த ஐபிஎல் கேப்டன் யார் என்ற கேள்விக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம் பதிலளித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி மிரட்டி வருகிறது. இதையடுத்து, கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால்,பள்ளி கல்லூரிகள், பொது இடங்களில், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இதனால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் தந்தது. இதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டி நடைபெறுமா அல்லது நடைபெறாத என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் எழும்பியுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணப்பா கௌதம் பதிலளித்துள்ளார், அவர்கூறியது ” மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டுமே ஐபிஎல் போட்டியில் மிகவும் சிறந்த அணி” சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளது”. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தான் சிறந்த அணி என்றும் கூறியுள்ளார்.
அடுத்ததாக அவரிடம் விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி மூவரில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி கேட்டகப்பட்டது, அதற்கு அவர் ” தோனி வெற்றிகரமான சிறந்த கேப்டன் ரோஹித் சர்மாவும் சிறந்த கேப்டனாக திகழ்கிறார், ஏனெனில் மிகவும் நெருக்கடியான சூழல்களை தோனியை போலவே அமைதியாக இருந்து நிதானமாக அனைத்தையும் எதிர்கொள்பவர் ரோஹித் சர்மா.
ஆனால் விராட் கோலி இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர். விராட் கோலி மிகவும் கோபம் உடையவர், அவர் ஐபிஎல் போட்டியில் அதிகம் ரன்கள் குவித்தாலும் அவருடைய தலைமையில் உள்ள ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி ஒரு தடவைகூட கோப்பை அடித்ததில்லை, மேலும் ஐபிஎல் போட்டியில் கேப்டனாக விராட் கோலி சாதிக்கவில்லை என்பதே, கோலியின் கேப்டன்சி மீதான விமர்சனத்துக்கு,வழிவகுக் கிறது என்று வெளிப்படையாக கிருஷ்ணப்பா கௌதம் கூறியுள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…