இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 17 ஆண்டுகால சாதனையை இன்றைய போட்டியில் முறியடித்தார்.
ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, கான்பெர்ரா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இன்று ஆறுதல் வெற்றிபெறும் நோக்குடன் இந்திய அணி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி தற்பொழுது தீவிரமாக விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் 23 ரன்கள் அடித்தால் 12,000 ரன்களைக் கடந்த வீரர் எனும் பட்டியலில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஷிகர் தவான் வெளியேறிய பின் களமிறங்கிய கோலி, நிதானமாக ஆடி 23 ரன்கள் குவித்து, 12,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த சாதனையை இந்திய அணியில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்ஸ் ஆடி குவித்த நிலையில், 242 இன்னிங்ஸ் மட்டுமே ஆடி சச்சினின் 17 ஆண்டுகால சாதனையை கோலி முறியடித்தார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…