10 ஆண்டுகளாக கோலி செய்த அந்த சாதனை இந்த ஒருநாள் தொடரில் இல்லை.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
2009 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து ஒருநாள் தொடரில் கோலி ஒரு சதமாவது அடித்து வந்த நிலையில், இந்தாண்டு ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, கான்பெர்ரா மாகாணத்தில் இன்று நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாம் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதல் முதலாக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமான யாக்கர் மன்னன் நடராஜன், தனது அபார யாக்கரால் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதுவரை 2009 முதல் 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து ஒருநாள் தொடர்களிலும் சதம் அடிக்காமல் புறப்படமாட்டார். ஆனால் ஆஸ்திரேலியாக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியில் கேப்டன் கோலி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள், ஏமாற்றம் அடைந்தனர்.
விராட் கோலி சதம் அடித்த ஆண்டுகள்:
2008 – 0
2009 – 1
2010 – 3
2011 – 4
2012 – 5
2013 – 4
2014 – 4
2015 – 2
2016 – 3
2017 – 6
2018 – 6
2019 – 5
2020 – 0*