சதம் போச்சு..டென்ஷனாகி ஸ்டெம்பை மிதித்த க்ளாசென்! அபராதம் போட்ட ஐசிசி!

ஸ்டம்பை உதைத்ததற்காக ஹெய்ன்ரிக் க்ளாசெனுக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Heinrich Klaasen

கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி ஆட்டக்காரர் ஹெய்ன்ரிக் க்ளாசென் செய்யும் செயல்கள் உள்ளது. ஏனென்றால், அவர் பாகிஸ்தானுக்கு எதிரான  போட்டிக்கு நடுவே அவுட்டான காரணத்தால் ஸ்டெம்பை மிதித்து தள்ளி அபராதத்தை பெற்றுக்கொண்டார்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே, டி20 தொடர் நடந்து முடிந்த நிலையில், அதில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில், 2-வது ஒரு நாள் போட்டியில் தான் ஹெய்ன்ரிக் க்ளாசென் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த காரணத்தால் கோபத்தில் அவுட் ஆனவுடன் ஸ்டெம்பை தன்னுடைய காலால் உதைத்து கீழே தள்ளிவிட்டார். போட்டியில் வெற்றிபெறுவதற்கு கடைசியாக தென்னாப்பிரிக்கா அணிக்கு 42 பந்துகளில் 82 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், இருந்தது.

ஹெய்ன்ரிக் க்ளாசென் அதிரடியான ஆட்டக்காரர் என்பதால் போட்டியில் இன்னும் உயிர் இருக்கிறது என அணியும் ரசிகர்களும் நம்பிக்கை வைத்து பார்த்து கொண்டு இருந்தார்கள். ஆனால், கடைசி விக்கெட்டாக கிளாசென் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 74 பந்துகளில் 97 ரன்கள் எடுத்த அவரால் சதமும் விளாச முடியவில்லை. போட்டியிலும் அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை. எனவே, இதனால் மிகவும் கடுப்பான ஹெய்ன்ரிக் க்ளாசென் ஸ்டெம்பை உதைத்தார்.

இதனையடுத்து, என்ன இதெல்லாம்? இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து ஐசிசி நிர்வாகம் ஹெய்ன்ரிக் க்ளாசெனின் போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்தது. சர்வதேச போட்டியின் போது கிரிக்கெட் சம்பந்தமான பொருட்களை சேதப்படுத்துவது விதி 2.2ஐ மீறும் ஒரு குற்றம். எனவே, அதன் அடிப்படையில், ஹெய்ன்ரிக் க்ளாசெனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்