கே.எல். ராகுல் : பிரபலங்கள் பலரும் மும்பையில் வீடு வாங்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அதியா ஷெட்டி இணைந்து பிரமாண்ட செலவில் அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மும்பையின் புகழ்பெற்ற பாலி ஹில் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு சொகுசு அடுக்குமாடி அபார்ட்மென்டை வாங்கியுள்ளனர்.
இந்த உயர்நிலை மண்டபமான பந்த்ரா பகுதியில் புதிதாக வாங்கியுள்ள சொத்து 3,350 சதுர அடிகளை உள்ளடக்கியது. சந்து பாலஸ் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள இந்த அபார்ட்மெண்ட்டை முன்பே வாங்க ஆசைப்பட்டு இருந்த நிலையில், இருவரும் முடிவெடுத்து தற்போது வாங்கியுள்ளனர்.
அவர்கள் கொடுத்து வாங்கியுள்ள விலை விவரங்களின் படி, கே.எல். ராகுல்-அதியா ஷெட்டி தம்பதியினர் 1.20 கோடி ரூபாய் முத்திரை கட்டணம் மற்றும் 30,000 ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்தியுள்ளார்கள் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இவர்கள் வாங்கிய அபார்ட்மெண்ட் நான்கு கார் பார்க்கிங் இடங்களை உள்ளடக்கியது.
பபுதிதாக அபார்ட்மெண்ட்டை வாங்கியுள்ள கே.எல். ராகுல்-அதியா ஷெட்டி தம்பதியினருக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், கே.எல். ராகுல் நடிகை அதியா ஷெட்டியை காதலித்து கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மேலும், இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணத்திற்கு தயாராகியிருக்கும் நிலையில், மூத்த வீரர்கள் பலர் தொடரில் ஓய்வு பெறுவதால் ராகுல் அணி சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி, அவர் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழிநடத்தவுள்ளார் எனவும் தகவல்கள் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…