அடேங்கப்பா! மும்பையில் அபார்ட்மெண்ட் வாங்கிய கே.எல். ராகுல்…விலை எவ்வளவு தெரியுமா?

kl rahul new home

கே.எல். ராகுல் : பிரபலங்கள் பலரும் மும்பையில் வீடு வாங்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான அதியா ஷெட்டி இணைந்து பிரமாண்ட செலவில்  அபார்ட்மெண்ட்  ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மும்பையின் புகழ்பெற்ற பாலி ஹில் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு சொகுசு அடுக்குமாடி அபார்ட்மென்டை வாங்கியுள்ளனர்.

இந்த உயர்நிலை மண்டபமான பந்த்ரா பகுதியில் புதிதாக வாங்கியுள்ள சொத்து 3,350 சதுர அடிகளை உள்ளடக்கியது. சந்து பாலஸ் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள இந்த அபார்ட்மெண்ட்டை முன்பே வாங்க ஆசைப்பட்டு இருந்த நிலையில், இருவரும் முடிவெடுத்து தற்போது வாங்கியுள்ளனர்.

அவர்கள் கொடுத்து வாங்கியுள்ள விலை விவரங்களின் படி,  கே.எல். ராகுல்-அதியா ஷெட்டி தம்பதியினர் 1.20 கோடி ரூபாய் முத்திரை கட்டணம் மற்றும் 30,000 ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்தியுள்ளார்கள் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இவர்கள் வாங்கிய அபார்ட்மெண்ட்  நான்கு கார் பார்க்கிங் இடங்களை உள்ளடக்கியது.

பபுதிதாக அபார்ட்மெண்ட்டை வாங்கியுள்ள கே.எல். ராகுல்-அதியா ஷெட்டி தம்பதியினருக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், கே.எல். ராகுல் நடிகை அதியா ஷெட்டியை காதலித்து கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேலும், இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணத்திற்கு தயாராகியிருக்கும் நிலையில், மூத்த வீரர்கள் பலர் தொடரில் ஓய்வு பெறுவதால் ராகுல் அணி சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி, அவர் ஒரு நாள் போட்டிகளில் அணியை வழிநடத்தவுள்ளார் எனவும் தகவல்கள் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin