“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….
நேற்று ஐபிஎல் போட்டியில் RCB அணிக்கு எதிராக டெல்லி அணி வெற்றி பெற்ற போது டெல்லி வீரர் கே.எல்.ராகுல் செய்த வெற்றி கொண்டாட்டம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் களமிறங்கிய RCB அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை டெல்லி அணி 18வது ஓவரில் சேஸ் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய டெல்லி அணியில், ஃபாப் டுபிளெசி (2), ஜேக் ப்ரேசர் மெக்குர்க் (7), அபிஷேக் போரல் (7) ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேற, கே.ராகுல் நிலைத்து ஆடி 53 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்ஸர் என 93 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தார்.
இறுதி வரை களத்தில் நின்று வெற்றி பெற்ற பிறகு கே.எல்.ராகுல் அதனை கொண்டாடிய விதம் இணையத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. ஆட்டம் நடைபெற்ற பெங்களூரு (கர்நாடகா) பகுதியை சேர்ந்தவர் தான் கே.எல்.ராகுல், அதனால் தனது பேட்டால் கிரவுண்டில் சிறிய வட்டம் போட்டு அதில் பேட்டால் கொடி நட்டுவது போல செய்கை செய்து இது எனது கிரவுண்ட் என்பது போல கொண்டாடி இருப்பார். இது கிரவுண்ட்டில் இருந்த ரசிகர்களை கொண்டாட வைத்தது.
கே.எல்.ராகுல் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கர்நாடகா அணிக்காக ராஞ்சி டிராபி போன்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி உள்ளார். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் 2013 முதல் 2016 வரையில் விளையாடி உள்ளார்.
KL Rahul said, “Chinnaswamy Stadium is still my home”#KLRahul pic.twitter.com/gSTkBtszY8
— SteveNani49✨🤸 (@_eyesonTalkie_) April 10, 2025