INDvENG: கே .எல் ராகுல் சதம் விளாசல்..!
கே .எல் ராகுல் 108 பந்தில் சதம் விளாசினார்.
இன்று இந்தியா, இங்கிலாந்து இடையே 2-ம் ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது. இப்போட்டியில் கே .எல் ராகுல் 108 பந்தில் சதம் விளாசினார். இதனால் ஒருநாள் போட்டியில் கே .எல் ராகுல் அடித்த 5-வது சதம் ஆகும்.
தற்போது இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 44 ஓவர் முடிவில் 267 ரன்கள் எடுத்துள்ளனர். பண்ட் 59* , கே .எல் ராகுல் 106* ரன்களுடன் விளையாடி வருகின்றனர். முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.