கே.எல்.ராகுலுக்கு இன்னும் அதிகமான ஓய்வு தேவை என்பதால், அவர் டி20 தொடரிலும் பங்கேற்கமாட்டார் என தகவல்.
வெஸ்ட் இண்டீஸ்-க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்ட நிலையில், இன்று கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
அதன்படி, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே வரும் 29ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரின் இறுதி போட்டி ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கிறது. ஒருநாள் போட்டியில் ஷிகர் தவண் தலைமையில் இந்திய அணி விளையாடி வருகிறது. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில், டி20 தொடரில் பங்கேற்க ரோஹித் சர்மா மீண்டும் அணியில் இணைய உள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள கே.எல்.ராகுலுக்கு இன்னும் அதிகமான ஓய்வு தேவை என்பதால், அவர் டி20 தொடரிலும் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைய ராகுலுக்கு இன்னும் பதினைந்து நாட்கள் ஓய்வு தேவை என்றும் கூறப்படுகிறது.
எனினும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ராகுலுக்கு பதிலாக மாற்று வீரர் அனுப்பப்பட வாய்ப்பில்லை என்றும் ரிஷப் பண்ட் அல்லது இஷான் கிஷன் ரோஹித்துடன் இணைந்து ஓபன் செய்யலாம் எனவும் தகவல் கூறப்படுகிறது. இப்போது யாரையாவது அனுப்புவதில் எந்தப் பயனும் இல்லை என்றும் பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் அறுவை சிகிச்சைக்குப் பின் கேஎல் ராகுல் இதுவரை சர்வதேச போட்டிகளில் எதிலும் பங்கேற்கவில்லை. மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக ராகுல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனாவில் பாதிக்கப்பட்டார். தற்போது கொரோனாவிலிருந்து முழுவதும் குணமடைய இன்னும் 15 நாட்கள் தேவைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஜிம்பாப்வே தொடரில் கண்டிப்பாக பங்கேற்பார் என கூறப்படுகிறது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…