பஞ்சாப் அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் 2021 இன் 53 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெஸிஸ் இருவரும் களமிறங்கினர்.
வந்த வேகத்தில் ருதுராஜ் 12 ரன் எடுத்து ருதுராஜ் வெளியேனார். பின்னர், களம் கண்ட மொயீன் அலி டக் அவுட் ஆக ராபின் உத்தப்பா 2 , அம்பதி ராயுடு 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து இறங்கிய கேப்டன் தோனி 12 ரன்னில் பிஷ்னோயிடம் போல்ட் ஆனார். நிதானமாக விளையாடிய ஃபாஃப் டு ப்ளெஸிஸ் அரைசதம் விளாசி 76 ரன்கள் எடுத்து விக்கெட்டைஇழந்தார்.
இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 134 ரன் எடுத்து 6 விக்கெட்டை இழந்தது. பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான் தலா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் , ஷமி தலா 1 விக்கெட்டை பறித்தனர். 135 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், KL ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய சர்பராஸ் கான் டக் அவுட் ஆக, ஷாருக்கான் 8 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். ஆனால், மறுபுறம் கே.எல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற செய்தார். இறுதியாக பஞ்சாப் அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கே.எல் ராகுல் 42 பந்தில் 8 சிக்ஸர் , 7 பவுண்டரி விளாசி 98* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இப்போட்டியில் சென்னை தோல்வி அடைந்ததால் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…