தென்ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு துணை கேப்டனாக கே.எல்.ராகுலை நியமித்து பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், வலை பயிற்சியின் போது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதனால், டெஸ்ட் அணிக்கு துணை கேப்டன் யார்..? என்ற கேள்வி எழுந்தது. இந் நிலையில் துணை கேப்டனாக கே.எல்.ராகுலை நியமித்து உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். கே.எல்.ராகுல் 40 டெஸ்டுகளில் விளையாடி 6 சதம் உள்பட 2,321 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30 வரையும்,
இரண்டாவது டெஸ்ட்: ஜனவரி 03-07 வரையும்,
மூன்றாவது டெஸ்ட்: ஜனவரி 11-15 வரையும் நடைபெறவுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 19-ஆம் தேதி
இரண்டாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 21-ஆம் தேதி
மூன்றாவது ஒருநாள் போட்டி: ஜனவரி 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…