ருத்ரதாண்டவம் ஆடிய கே.எல்.ராகுல், ஹூடா.., 221 ரன்கள் குவித்த பஞ்சாப் ..!

Published by
murugan

பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்தனர்.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய  4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதைத்தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க  கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 14 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், இறங்கிய கிறிஸ் கெய்ல் 2 சிக்ஸர், 4 பவுண்டரி என மொத்தம் 40 ரன்கள் குவித்தார். அடுத்து இறங்கிய தீபக் ஹூடா உடன் கூட்டணி வைத்த கே.எல்.ராகுல் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இருவரும் அரைசதம் விளாசினர்.

அதிரடியாக விளையாடி வந்த தீபக் ஹூடா 28 பந்தில் 64 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். தீபக் ஹூடா, கே.எல்.ராகுல் கூட்டணியில் 103 ரன்கள் எடுத்தனர். அடுத்து இறங்கிய நிக்கோலஸ் பூரன் வந்த வேகத்தில் முதல் பந்திலே விக்கெட்டை இழந்தார். கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்தனர். இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 222 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது.

Published by
murugan

Recent Posts

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளில் கோளாறு!

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோளில் கோளாறு!

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…

15 minutes ago

செய்தியாளர்கள் முன் நிர்வாணமாக நின்ற மாடல் நடிகை.! இணையத்தை திக்குமுக்காட வைத்த வீடியோ…

அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…

32 minutes ago

“அதிக ரிஸ்க் – அதிக வெற்றிகள் : இதுதான் இனி எங்கள் பாதை” கம்பீர் அதிரடி!

மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…

41 minutes ago

சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.680 குறைவு!

சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…

1 hour ago

“வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்” மு.க.ஸ்டாலின் சூளுரை!

சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…

2 hours ago

திருப்பரங்குன்றம் பதற்றம்.., இன்றும் நாளையும் மதுரையில் 144 தடை!

மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…

3 hours ago