#INDvENG : சதத்தை தவறவிட்டது குறித்து கே.எல்.ராகுல்!
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதனுடைய முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா அணியின் முதல் இன்னிங்ஸின் போது 123 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து கே.எல்.ராகுல் தனது சதத்தை தவறவிட்டார். இதனையடுத்து, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் 2-வது நாள் முடிவில் கே.எல் ராகுல் சத்தத்தை தவறவிட்டது பற்றி பேசினார்.
இது குறித்து ஜியோசினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 இல் ‘ பேசிய கே.எல்.ராகுல் ” நான் சதம் அடிப்பதை தவறவிட்டு இருந்தாலும் ஒரு பக்கம் அதனை நான் ரசித்தேன். நேற்று இங்கிலாந்து விளையாடுவதைப் பார்த்தோம், அவர்கள் பேட்டிங் செய்ததில் இருந்து எனக்கு தெரிய வந்த விஷயம் என்னவென்றால், அது ஒரு விக்கெட் அல்ல என்பதனை நான் உணர்ந்துக்கொண்டேன்.
மேட்ச் பிக்சிங்கில் சோயிப் மாலிக்? ஒப்பந்தத்தை ரத்து செய்த பிபிஎல் நிர்வாகம் !
பேட்டிங் செய்ய வருவதற்கு முன்பே அவுட் ஆகிவிடுவோமோ என்று பயந்துகொண்டு இருந்தேன். இருந்தாலும் நிதானமாக விளையாடி 86 ரன்கள் எடுத்தேன். பேட்டிங் செய்ய வருவதற்கு முன்பே அந்த மாதிரி, இந்த மாதிரி என நான் சில ஷாட்களை மனதில் வைத்திருந்தேன்.
அதற்கான பந்துகளையும் சரியாக பந்துவீச்சாளர்கள் வீசியதும் நான் யோசித்து வைத்திருந்த சில ஷாட்களை என்னால் அடிக்க முடிந்தது. நான் எப்படி விளையாடினாள் ரன்களை எடுக்க முடியும் என்பதைப் பார்க்க விரும்பினேன். நான் காலையில் ரோஹித்திடம் பேசினேன், விக்கெட் சற்று மெதுவாக உள்ளது, நீங்கள் வெளியே சென்று உங்கள் ஷாட்களை விளையாடத் தொடங்க முடியாது என்று அவர் என்னிடம் கூறினார். பிறகு நிதானமாக விளையாடி ரன்களை குவித்தேன்” எனவும் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.