அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியை கேப்டனாக அக்சர் படேல் வழிநடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது.

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய அணி வீரர்களுடன் பயிற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்த சூழலில், சில அணிகளில் கேப்டன்கள் யார் என்று அறிவிக்கப்பட்டாலும் சில அணிகளில் யார் இந்த ஆண்டு அந்த அணியை வழிநடத்துவார் என்பதற்கான அறிவிப்புகள் வரவில்லை. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் டெல்லி அணியை இந்த முறை யார் வழிநடத்தபோகிறார் என்பதற்கான அறிவிப்புகள் வரவில்லை.
இருப்பினும், தற்போது டெல்லி அணியில் இருக்கும் கே.எல்.ராகுலை தான் அணி நிர்வாகம் ஏலத்தில் அதிகமான தொகையை செலவு செய்து ஏலத்தில் எடுத்தது. இதற்கு முன்னதாக அவர் லக்னோ அணியில் இருந்த காரணத்தாலும் அவரை டெல்லி அணி ஏலத்தில் இந்த முறை எடுத்ததும் நிச்சயமாக அவர் தான் கேப்டனாக இருக்கப்போகிறார் என பலரும் நம்பினார்கள். ஆனால், இப்போது எனக்கு கேப்டன் பதவியே வேண்டாம் என கே.எல்.ராகுல் அணி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேப்டன் சி செய்யவேண்டும் என்றால் அதன் மூலம் அழுத்தம் ஏற்படலாம் எனவே தன்னுடைய பேட்டிங்கில் சரியாக கவனத்தை செலுத்தமுடியாது என்ற காரணத்தால் கேப்டன் பதவி தனக்கு வேண்டாம் என கே.எல்.ராகுல் கூறியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. தன்னை ஒரு வீரராக விளையாட விடுமாறு கேட்டுக்கொண்ட காரணத்தால் அவருக்கு அழுத்தம் கொடுக்காமல் அணி நிர்வாகம் வேறு வீரரை கேப்டனாக நியமனம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன்படி, ஆள் – ரவுண்டர் அக்சர் படேலை கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது. இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை எனவே, உண்மை என்று தெரியவேண்டும் என்றால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாம் காத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025