கே.எல் ராகுல்- அதியா திருமணவிழா! வெளியான புகைப்படம்.!
கே.எல் ராகுல்- அதியா திருமணவிழா புகைப்படத்தை நடிகர் சுனில் ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல் மற்றும் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியின் திருமணம் நேற்று கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்குப் பிறகு, நடிகர் சுனில் ஷெட்டி தனது முதல் வலைதளப் பதிவாக தனது இன்ஸ்டாகிராமில் திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
சுனில் தனது இன்ஸ்டா பதிவில், “பிடிப்பதற்கு ஒரு கை மற்றும் நம்புவதற்கு ஒரு காரணம், ஏனெனில் சில நேரங்களில் சரியான இடம் நமக்கான ஒரு நபர் தான், அன்பு மற்றும் நம்பிக்கை … வாழ்த்துக்கள்” என தம்பதிகளை டேக் செய்து பதிவிட்டிருந்தார். சுனிலின் இந்த பதிவிற்கு உடனே அதியா, இதய எமோஜியுடன் “லவ் யூ” என்று பதிலளித்தார்.
இதனையடுத்து பல பிரபலங்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். நடிகை ஷில்பா ஷெட்டி, உங்களுக்கும் மனாவுக்கும் வாழ்த்துக்கள் என கூறியிருந்தார். அழகான ஜோடி உலகில் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் என்று நடிகை சமீரா ரெட்டி கூறினார்.
View this post on Instagram