டாடா ஐபிஎல் 2022 இன் 47-வது போட்டியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் 2022-இல் இதுவரை கொல்கத்தா அணி ஒன்பது போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது மற்றும் தற்போது புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் தோல்வியுற்றால் பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.இதனால்,ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,இந்த சூழ்நிலையைத் தவிர்க்க தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி செல்ல முயற்சி செய்யும்.ஆனால்,மறுபுறம்,ராஜஸ்தான் ராயல்ஸ் ஒன்பது போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் இரு அணிகளும் ஏற்கனவே ஒருமுறை பிரபோர்ன் மைதானத்தில் மோதிய நிலையில்,அப்போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால்,ராஜஸ்தான் அணிக்கு இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா பதிலடி கொடுக்குமா என்று பொறுத்திருந்து காண்போம்.
சாத்தியமான கொல்கத்தா லெவன்: ஆரோன் பின்ச்,வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்),நிதிஷ் ராணா,பாபா இந்திரஜித் (வி.கீப்பர்), ரின்கு சிங்,ஆண்ட்ரே ரஸ்ஸல்,சுனில் நரைன்,உமேஷ் யாதவ்,டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா
சாத்தியமான ராஜஸ்தான் லெவன்: ஜோஸ் பட்லர்,தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் & வி.கீப்பர்),டேரில் மிட்செல்,ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக்,ரவிச்சந்திரன் அஷ்வின்,டிரெண்ட் போல்ட்,பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…