#KKRvGT: டாஸ் வென்று குஜராத் அணி பேட்டிங் தேர்வு!

கொல்கத்தா அணிக்கு எதிரான 35வது லீக் போட்டியில் குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைக்கு இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இதனிடையே, நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய குஜராத் அணி, 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுபோன்று 7 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி, 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இப்போட்டி கொல்கத்தா அணிக்கு முக்கியமானவை என்று கருதப்பட்டாலும், இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்): விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி பெர்குசன், யாஷ் தயால், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், டிம் சவுத்தி, சிவம் மவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
லோகேஷ் படத்தில் ஐட்டம் பாடல்! பூஜா ஹெக்டே வைத்து சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025