GUJARAT TITANS [IMAGE SOURCE : TWITTER]
குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 180 ரன்கள் எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது.
இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தது. குர்பாஸ் 39 பந்துகளில் 81 ரன்கள்(7 சிக்ஸர், 5 போர்கள்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிங்கு சிங்(19) மற்றும் ரசல்(34) ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தனர்.
இதனையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 11-வது ஒவரில் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின், களமிறங்கிய டேவிட் மில்லர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். விஜய் சங்கர் 51 ரன்களை குவித்து, அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 180 ரன்கள் எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…