#IPL2022: 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 47-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திராஜித் – ஆரன் பின்ச் களமிறங்கினார்கள்.
தொடக்கத்திலே 4 ரன்கள் அடித்து பின்ச் தனது விக்கெட்டை இழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி சிறப்பாக ஆடத் தொடங்கினார். 15 ரன்கள் எடுத்து இந்திராஜித் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் 34 ரன்கள் எடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறினார். பின்னர் நிதிஷ் ராணா – ரிங்கு சிங் கூட்டணி களமிறங்கினார்கள். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி, 19.1 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025