#IPL2022: 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய பிராவோ.. முதல் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா!
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடியில் 131 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தோனி 50 ரன்களும், உத்தப்பா 28 ரன்களும், ஜடேஜா 26 ரன்கள் குவித்தனர்.
132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரஹானே – வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே நிதானமாக ஆடிவந்த நிலையில், 16 ரன்கள் குவித்து வெளியேறினார். அதனையடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா, ரஹானேவுடன் இணைத்து சிறப்பாக ஆடிவந்தார்.
இருவரின் கூட்டணியில் அணியில் ஸ்கொர் உயர, 21 ரன்கள் அடித்து நிதிஷ் ராணா வெளியேறினார். அவரைதொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த ரஹானே அதிரடியாக ஆடி 44 ரன்கள் குவித்து வெளியேற, இறுதியாக கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சை பொறுத்தளவில் பிராவோ. 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.