59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பிளே-ஆப்ஸ் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இன்று நடைபெறும் 41-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 194 ரன்கள் எடுத்தது.டெல்லி அணியின் பந்துவீச்சில் ரபாடா ,அன்ரிச் நோர்ட்ஜெ ,ஸ்டைனிஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.பின்பு 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே – தவான் களமிறங்கினார்கள்.
முதல் பந்திலே ரஹானே டக் அவுட் ஆக, அவரைதொடர்ந்து 6 ரன்கள் அடித்து தவான் வெளியேறினார். அவரைதொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் – ரிஷப் பந்த் கூட்டணி சிறப்பாக ஆடிவந்தனர். அணியில் ஸ்கொர் உயர, 27 ரன்கள் குவித்து ரிஷப் பந்த் வெளியேற, ஸ்ரேயாஸ் ஐயரும் 47 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். ஹெட்மேயர் 10 ரன்களில் வெளியேற, அணியில் வெற்றிவாய்ப்புகள் குறையத் தொடங்கியது.
அதன்பின் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்களை இழந்து 135 ரன்கள் அடித்து, 59 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது. மேலும், புள்ளிப் பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்து, பிளே-ஆப்ஸ் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…