ஐபிஎல் 2024 : இந்த முறை ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றதுடன் இந்த தொடரிலும் புதிய புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளது அதனை பற்றி இதில் பார்க்கலாம்.
இந்த ஆண்டில் நடைபெற்று தற்போது முடிந்திருக்கும் இந்த ஐபிஎல் 2024-ம் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது. மேலும், கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் 4 முறை இறுதி போட்டிக்கு வந்து அதில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் சென்னை, மும்பை அணிகளுக்கு அடுத்த படியாக ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான ஐபிஎல் அணி என்ற பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளனர்.
இந்த கோப்பையை வென்றதன் மூலம் நடைபெற்ற இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி புதிய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. அதில் முதலாவதாக, இந்த 2024-ல் சீசனில் கொல்கத்தா அணி 14 லீக் போட்டி, 2 பிளே ஆஃப் போட்டி என மொத்தம் 16 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 16 போட்டிகளில், வெறும் 3 தோல்விகளை மட்டுமே பதிவு செய்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.
இதனால் 2008-ம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற அணியான ராஜஸ்தான் அணியும் அந்த தொடரில் 3 தோல்விகளை மட்டுமே பெற்று சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர். இதனால் ஒரு தொடரில் குறைந்த போட்டிகளில் தோற்று கோப்பையை வென்ற அணியாக கொல்கத்தா அணி, ராஜஸ்தான் அணிக்கு அடுத்த படியாக மாறியுள்ளது.
2-வதாக, ஐபிஎல் வரலாற்றில் பிளே-ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளில் அதிக பந்துகள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணியாக கொல்கத்தா அணி உள்ளது. 3-வதாக இந்த ஐபிஎல் தொடரில் மட்டும் கொல்கத்தா அணி, எதிர்த்து விளையாடிய எதிரணிகளை 6 முறை ஆல்-அவுட் செய்துள்ளது. ஒரு ஐபிஎல் தொடரில் ஒரு அணி அதிக முறை ஆல்-அவுட் செய்திருப்பது இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன் இந்த சாதனையை மும்பை அணி (4 முறை -2008, 2010) கைவசப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
4-வது சாதனையாக, கொல்கத்தா அணி இந்தியாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் அனைத்திலும் வெற்றி பெற்று, அதாவது 100% சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அணி மொத்தம் 4 முறை இறுதி போட்டிக்கு சென்றுருக்கிறது அதில் 1 முறை சென்னை அணியிடம் தோல்வியடைந்துள்ளது. ஆனால் தோல்வியடைந்த அந்த 1 இறுதி போட்டியும் துபாயில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
5-வது சாதனையாக, ஐபிஎல் தொடரில் ஒரு இறுதி போட்டியில் அதிக டாட் பந்துகள் வீசிய அணியாக முதலிடத்தில் உள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த இறுதி போட்டியில் மட்டும் 56 டாட் பந்துகளை வீசியுள்ளனர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இறுதி போட்டியில் அதிக டாட் பந்துகள் வீசிய புதிய சாதனையை படைத்துள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…