வெற்றியை தொடர்ந்து புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்ற #KKR..!

Default Image

நேற்று கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. 

நேற்று ஐபிஎல் தொடரின் 24 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் – கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து.

அடுத்ததாக 165 என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 20. ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழந்து 162 ரன்கள் மட்டுமே அடித்தது, இதனால் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. இதுவரை இந்த சீசனில் கொல்கத்தா அணி 6 போட்டிகள் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகள் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்