KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
ஹைதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று விளையாடுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான சுனில் நரேன் 7 ரன்னிலும், குயின்டன் டி காக் 1 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் ரஹானே நிதானமாக விளையாடி 38 ரன்கள் எடுத்தார். அங்கிரிஷ் ரகுவன்ஷிவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் (50) அடித்து அவுட் ஆகினார்.
இதில் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் மட்டும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 60 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். ரிங்கு சிங் 17 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸர் விளாசி 32 ரன்கள் விளாசி இறுதி வரை களத்தில் நின்றார்.
இறுதியாக 20 ஓவர் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. 20 ஓவரில் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்க உள்ளது. ஹைதராபாத் அணி சார்பில் முகமது ஷமி, கேப்டன் பேட் கம்மின்ஸ், ஜீஷன் அன்சாரி, கமிந்து மெண்டிஸ், ஹர்ஷல் படேல்ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.