KKR vs RCB : ஆரம்பமே அரோகரா.!? முதல் போட்டி நடக்குமா.? வானிலை நிலவரம்…,
ஐபிஎல் 2025-இன் முதல் போட்டி மழையால் தடைபடுமா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கவலை எழுப்பி வருகின்றனர்.

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் முதல் போட்டியாக, நாளை (மார்ச் 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் மோதவுள்ளன. நாளை தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியிலேயே ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை உள்ளது.
அப்படி என்னன்னு கேட்டீங்கன்னா? ஐபிஎல் 2025 தொடர் பிரமாண்ட தொடக்க விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மழையால் போட்டி தடைபடுமா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கவலை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், நாளைய கொல்கத்தாவின் வானிலை நிலவரத்தை விரிவாகப் பார்ப்போம்.
மார்ச் 22 அன்று வானிலை முன்னறிவிப்பு:
வானிலை முன் அறிவிப்பின்படி, வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மற்றும் காற்று ஒருங்கிணைப்பு (wind confluence) காரணமாக, மேற்கு வங்காளத்தில் மார்ச் 20-22 வரை மழை பெய்யும்.
கொல்கத்தாவில், மார்ச் 22 அன்று பகல் நேரத்தில் (மதியம் வரை) 65% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாலை மற்றும் இரவு நேரத்தில் (போட்டி நடைபெறும் நேரம், பொதுவாக 7:30 PM IST முதல்) மழை பெய்யும் வாய்ப்பு குறைந்து, வானிலை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டி நடக்குமா?
இதன்படி, பகல் நேரத்தில் மழை பெய்தாலும், மாலைக்குள் வானிலை மேம்படும் என்று முன்னறிவிப்பு கூறுகிறது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சிறந்த வடிகால் வசதிகள் (drainage system) உள்ளதால், மிதமான மழை பெய்தாலும் போட்டி தொடங்குவதற்கு பெரிய தடையாக இருக்காது .
முன்னதாக ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக, மைதான ஊழியர்கள் மைதானத்தை மூடி பாதுகாத்து வருகின்றனர். மாலையில் இடியுடன் கூடிய மழை தொடர்ந்தால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் அல்லது ஓவர்கள் சுருக்கப்பட்டு போட்டி நடைபெறலாம்.
குறிப்பு :- ஒருவேளை மழையால் நாளை போட்டி முழுவதும் ரத்தானால், இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்துகொள்ளும்.