KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை பேட்டிங் தேர்வு செய்தார். இதனை அடுத்து ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் களமிறங்க தயாராகி வருகிறது. 

KKR VS LSG IPL 2025

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் விளையாட உள்ளன.  முதலில் இந்த போட்டி ஏப்ரல் 6 (ஞாயிற்று கிழமை) நடைபெற இருந்தது. அன்றைய தினம் ராம நவமி என்பதால் கொல்கத்தாவில் அன்றைய தினம் நடத்தப்படாமல் போட்டி இன்றைக்கு மாற்றப்பட்டது.

ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி 4 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றி 2இல் தோல்வி கண்டுள்ளது. இறுதியாக ஏப்ரல் 3இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் KKR களமிறங்க உள்ளது.

கொல்கத்தாவை போலவே லக்னோவும் 4 போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றி 2இல் தோல்வி என கண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 4இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு புள்ளிபட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கடந்த போட்டி வெற்றி உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் இரு அணிகளும் களமிறங்க உள்ளன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை பேட்டிங் தேர்வு செய்தார். இதனை அடுத்து ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் களமிறங்க தயாராகி வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :

அஜிங்க்யா ரஹானே தலைமையில் குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், வைபவ் அரோரா, ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுகின்றனர்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் :

ரிஷப் பண்ட் தலைமையில் மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், அவேஷ் கான், திக்வேஷ் சிங் ரதி ஆகியோர் விளையாடுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்