KKR vs LSG: டாஸ் வென்றது கொல்கத்தா அணி… லக்னோ அணி முதலில் பேட்டிங்.!

KKR vs LSG QC

ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs LSG போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங் தேர்வு.

ஐபிஎல் 2023 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிளேஆப் சுற்றுக்கு செல்லும் முனைப்பில் 6 அணிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இதில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.

லக்னோ மற்றும் கொல்கத்தா இரு அணிகளும் பிளேஆப் சுற்றுக்கு செல்ல இந்த போட்டி முக்கியம் என்பதால், இன்றைய போட்டியில் வெல்ல கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை. லக்னோ அணி இன்றைய போட்டியில் வென்றால் பிளேஆப்-க்கு தகுதி பெற்றுவிடும், ஆனால் கொல்கத்தா அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து தான் பிளேஆப் வாய்ப்பு உறுதியாகும்.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

கொல்கத்தா அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ்(w), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(c), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி

லக்னோ அணி: குயின்டன் டி காக்(w), கரண் ஷர்மா, பிரேரக் மன்கட், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா(c), ஆயுஷ் படோனி, கிருஷ்ணப்ப கவுதம், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்