KKR vs GT : சொந்த மண்ணில் குஜராத்திடம் படுதோல்வி அடைந்த கொல்கத்தா!
கொல்கத்தா மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்ததது. அதிகபட்சமாக GT கேப்டன் சுப்மன் கில் 55 பந்தில் 90 ரன்கள் அடித்தார். சாய் சுதர்சன் 52 ரன்கள் எடுத்திருந்தார். ஜோஸ் பட்லர் 41 ரன்களும், ஷாருக்கான் 11 ரன்களும் எடுத்தனர்.
20 ஓவரில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் குஜராத் அணியினரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
கேப்டன் ரஹானே மட்டும் 36 பந்தில் 50 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். ரஹமானுல்லா குர்பாஸ் (1 ரன்) , சுனில் நரேன் (17 ரன்கள்), வெங்கடேஷ் ஐயர் (14 ரன்கள்), ரசல் (21 ரன்கள்), ராமன்தீப் சிங் (1 ரன்), மெயின் அலி (0), ரின்கு சிங் (17 ரன்கள்)என அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
அங்கிரிஷ் ரகுவன்ஷி 27 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால், சொந்த மண்ணில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்ந்தது.