குஜராத்திடம் தோல்வி அடைந்த கொல்கத்தா! இதை செஞ்சிருந்தா வெற்றிபெற்றிருக்கலாம்…
கொல்கத்தா மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்ததது.
20 ஓவரில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் குஜராத் அணியினரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால், சொந்த மண்ணில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்ந்தது. தோல்விக்கான சில காரணங்களும் இருக்குறது.
பவர்பிளேயில் ஆக்ரோஷமான தொடக்கம்: குஜராத் அணி பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 60+ ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியது. கொல்கத்தா பந்துவீச்சாளர்கள், குஜராத் வீரர்களின் விக்கெட்களை வீழ்த்த தவறிவிட்டார்கள். பவர்பிளேயில் குறைந்த ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டாவது எடுத்திருந்தால், குஜராத் ஸ்கோரை 180-க்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம்.
பந்துவீச்சு தெளிவு இல்லை: கொல்கத்தாவின் பந்துவீச்சு திட்டம் ஒரே மாதிரியாக இருந்தது. கில் மற்றும் சுதர்சனின் ஆக்ரோஷமான பேட்டிங்கை கட்டுப்படுத்த, ஸ்பின்னர்களை (நரைன், சக்ரவர்த்தி) ஆரம்பத்தில் அதிகம் பயன்படுத்தியிருக்கலாம். நரைனின் இறுக்கமான ஓவர்கள் மிடில் ஓவர்களில் ரன் விகிதத்தை குறைத்திருக்கும். ஆனால், அதையும் செய்யவில்லை.
சேஸிங்கில் அதிரடி இல்லை : டார்கெட் பெரியது என்பதால் அதற்கான நல்ல தொடக்கம் கொடுத்தால் மட்டும் தான் வெற்றிபெறமுடியும். ஆனால், கொல்கத்தாவில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 1, சுனில் நரைன் 17 ரன் எடுத்து வெளியேறினார்கள். இவர்களும் குஜராத் வீரர்களை போல தொடக்கத்தை கொடுத்து அடித்தளம் அமைத்திருந்தால் கொல்கத்தா அணி வெற்றிபெற வாய்ப்பு அமைந்திருக்கும். அதைப்போல மிடில் ஆர்டரில் களமிறங்கிய வெங்கடேஷ் குமார் 14, ரிங்கு சிங் 17 ரன் எடுத்து அவர்களும் ஆட்டமிழந்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவர்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருந்தால் அணி வெற்றிப்பாதைக்கு சென்றிருக்கும். இது இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.