#KKR v RR: சுப்மான் கில் அரைசதம்…171 ரன்கள் எடுத்த கொல்கத்தா!

Default Image

ஐபிஎல் தொடரின் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகிறது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா தொடக்க வீரர்களான நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சுப்மான் கில் 56 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 38 ரன்களும் அடித்து விக்கெட்டை இழந்தனர். இதன்பின் வந்த நிதிஷ் ராணா 12 ரன்களில் வெளியேற, திரிபாதி 21 ரன்களுக்கு சகரியா பந்தில் போல்ட் ஆனார்.

இவர்களை தொடர்ந்து தினேஷ் கார்த்திக், இயோன் மோர்கன் ஒரு சில ரன்களை சேர்த்த நிலையில், இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை கொல்கத்தா அணி எடுத்து. ராஜஸ்தான் பந்துவீச்சை பொறுத்தளவில் மோரிஸ், சகாரியா, திவாட்டியா, பிலிப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி 171 ரன்கள் எடுத்த நிலையில், ராஜஸ்தான் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். கொல்கத்தா வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில இருக்கும். எனவே, போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
MI vs KKR - IPL 2025
raj thackeray
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay