ரஸல் கார்த்திக் அதிரடி: கொல்கத்தா அணி ரன் குவிப்பு!! சாதிக்குமா டெல்லி!
- கொல்கத்தா மற்றும் தில்லி அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 185 ரன்கள் குவித்துள்ளது
கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் கொல்கத்தா அணிக்கு சோதனை காத்திருந்தது.
அந்த அணியின் எந்த ஒரு வீரரும் சரியாக ஆடிக்கவில்லை. முதல் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தனர். 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி பரிதாபத்தில் இருந்தது. அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் அதிரடி வீரர் ரஸல் ஆகியோர் அற்புதமாக ஆடினார.
தினேஷ் கார்த்திக் 36 பந்துகளில் 50 ரன்கள் ரஸல் 28 பந்துகளில் 62 ரன்களும் குவித்தனர். இதன் மூலமாக கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. பொறுத்திருந்து பார்ப்போம் இளம் படை வீரர்கள் அடங்கிய டெல்லி அணி இந்த இலக்கைத் துரத்தி சாதிக்கிறதா என.