#IPL2022: அரைசதம் விளாசிய டி காக்.. கொல்கத்தா அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் – கே.எல்.ராகுல் களமிறங்கினார். இதில் ராகுல் ஒரு ரன் கூட எடுக்காமல் ரன் அவுட் ஆக, அவரையடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, டி காக்குடன் இணைந்து அதிரடியாக ஆடினார். இதில் 50 ரன்கள் எடுத்து டி காக் தனது விக்கெட்டை இழக்க, க்ருனால் பாண்டியா களமிறங்கினார்.
சிறப்பாக ஆடிவந்த தீபக் ஹூடா 41 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, 25 ரன்கள் எடுத்து க்ருனால் பாண்டியா வெளியேறினார். அவரைதொடர்ந்து களமிறங்கிய ஸ்டாலினிஸ் 28 ரன்களுக்கும், ஜேசன் ஹோல்டர் 13 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்கள். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா அணி களமிறங்கவுள்ளது.