#IPL2022: வெற்றிபெறுமா ராஜஸ்தான்? கொல்கத்தா அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
இன்று நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 47-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் – படிக்கல் களமிறங்கினார்கள்.
தொடக்கத்திலே 2 ரன்கள் அடித்து அதிரடியை வீரர் படிக்கல் தனது விக்கெட்டை இழக்க, சஞ்சு சாம்சன் களமிறங்கினார். நிதானமாக ஆடிவந்த பட்லர் 22 ரன்கள் எடுத்து வெளியேற, அவரையடுத்து 13 ரன்களிலும், ரியான் பராக் 19 ரன்கள் எடுத்து தங்களின் விக்கெட்டை இழந்தார்கள். மறுமுனையில் அதிரடியாக ஆடிவந்த சஞ்சு சாம்சன் 54 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா அணி பேட்டிங் செய்யவுள்ளது. பந்துவீச்சில் அதிகபட்சமாக டிம் சவூத்தி 2 விக்கெட்களும், சிவம் மாவு, அனுக்குள் ராய், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.