ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதிவரும் நிலையில், கொல்கத்தா அணிக்கு 132 ரன்களை இலக்காக வைத்தது சென்னை அணி.
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைதொடர்ந்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே களமிறங்கினார்கள்.
அதன்படி கொல்கத்தா அணியில் முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் பந்தே நோபால் சென்றதை தொடர்ந்து இரண்டாம் பந்து வைட் சென்றது. மூன்றாம் பந்தில் சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரர் ருதுராஜை டக் அவுட் ஆக்கினார். ருதுராஜை தொடர்ந்து களமிறங்கிய உத்தப்பா, பொறுமையான ஆட தொடங்கினார். மறுமுனையில் இருந்த டெவன் கான்வே 3 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய அம்பதி ராயுடு உத்தப்பாவுடன் இணைந்து பொறுமையாக ஆடி வந்தார். 28 ரன்கள் அடித்து உத்தப்பா வெளியேற, அணியில் கேப்டனான ஜடேஜா களமிறங்கினார். மறுமுனையில் இருந்த அம்பதி ராயுடு, ரன் அவுட் ஆக, அவரையடுத்து களமிறங்கிய ஷிவம் துபே, 3 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழக்க, தோனி களமிறங்கினார். ஜடேஜா – தோனி கூட்டணியில் சென்னை அணியின் ஸ்கொர் மலமலவென உயர்ந்தது.
இறுதியாக தல தோனியின் அதிரடியான அரை சதத்தால் சென்னை அணி, 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா அணி களமிறங்க உள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்களும், ரஸல் மற்றும் வருண் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்கள்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…