லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி, தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 101 ரன்கள் அடித்து 75 ரன்கள் அடித்து தோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திராஜித் – ஆரன் பின்ச் களமிறங்கினார்கள். 6 பந்துகள் விளையாடிய இந்திராஜித், ஒரு ரன் கூட அடிக்காமல் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்கள் அடித்து வெளியேற, 14 ரன்கள் எடுத்து ஆரன் பின்ச் வெளியேற, நிதிஷ் ராணா, ரிங்கு சிங் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
இந்த சரிவில் இருந்து அணியை மீட்க ரசல் – சுனில் நரேன் இணைந்து அதிரடியாக ஆடினார்கள் இதில் 45 ரன்கள் அடித்து ரசல் அவுட் ஆகினார். அதனைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக 14.3 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 101 ரன்கள் அடித்து 75 ரன்கள் அடித்து லக்னோ அணியிடம் தோல்வியை சந்தித்தது.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…