ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-வது அணியாக லக்னோ அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 66-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ் ஐயர் – அபிஜித் தோமர் களமிறங்கினார்கள்.
இதில் வெங்கடேஷ் ஐயர் டக் அவுட் ஆக, அவருக்கு பின்னாலே 4 ரன்கள் அடித்து தோமர் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் – நிதிஷ் ராணா கூட்டணி களமிறங்க, இவர்களின் கூட்டணியால் அணியின் ஸ்கொர் உயரத்தொடங்கியது. சிறப்பாக ஆடிவந்த நிதிஷ் ராணா 42 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, சாம் பில்லிங்க்ஸ் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ஸ்ரேயாஸ், 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
36 ரன்கள் எடுத்து சாம் பில்லிங்க்ஸ் தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ரசல் 5 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றிக்கனியை எட்டமுடியாது என்று எதிர்பார்க்கப்பட்டதை தொடர்ந்து, ரிங்கு சிங் களமிறங்கி அதிரடியாக ஆடினார். 15 பந்துகளுக்கு 40 ரன்கள் அடித்து விளாச, அவருக்கு ஈடாக சுனில் நரேன் 7 பந்துகளுக்கு 21 ரன்கள் அடித்து வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியுன்மூலம் 2-வது அணியாக லக்னோ அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…