“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!
ஐபிஎல் 2025க்கு வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக அஜிங்க்யா ரஹானே ஏன் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்கிற காரணத்தை கேகேஆர் தலைமை நிர்வாக அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார்.

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில் நடைபெறும். அதில், நடப்பு சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இடையே நடைபெறவிருக்கிறது.
நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் வெங்கடேஷ் ஐயர் தான் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம் வெங்கடேஷை கே.கே.ஆர் அணி, மிகப்பெரிய தொகைக்கு வாங்கியது.
ஆனால் ரஹானே அவரை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்பொழுது இதற்கான காரணத்தை கேகேஆரின் தலைமை நிர்வாக அதிகாரி விளக்கியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய மைசூர் வெங்கி, “85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்த அஜிங்க்யா ரஹானே, ஐபி எல் போன்ற தீவிரமான போட்டிகளுக்குத் தேவையான முதிர்ச்சியையும், தலைவராக சரியாக இருப்பார் என்று கூறினார்.
ESPN கிரிக்இன்ஃபோ-க்கு பேட்டியளித்த அவர்,”அஜிங்க்யா ரஹானே ஒரு வீரராக மட்டுமல்லாமல் ஒரு தலைவராகவும் ஏராளமான அனுபவங்களைக் கொண்டுள்ளார். அவர் 185 ஐபிஎல் போட்டிகளிலும், 200 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவர் இந்தியாவுக்கு கேப்டனாகவும், மும்பைக்கு கேப்டனாகவும், ஐபிஎல்லிலும் கேப்டனாகவும் இருந்துள்ளார். மேலும் அவர் ஐபிஎல்லின் முதல் சீசனில் இருந்து விளையாடி வருகிறார்.
இதெல்லாம் ரொம்ப முக்கியம், இதனால் ரஹானேவை கேப்டனாக நியமிப்பதில் எந்த ஆச்சரியமும் இருக்கக்கூடாது. ஐபிஎல் 2022-ல் மூன்று முறை சாம்பியனான கேகேஆருக்காக விளையாடிய ரஹானே. இம்முறை கேகேஆரில் விளையாடபோவது இரண்டாவது முறையாகும்.
வெங்கடேஷ் ஐயர் ஒரு இளம் வீரர், அதே நேரத்தில் ஐபிஎலில் கேப்டனாக இருப்பது ஒரு இளம் வீரருக்கு மிகவும் சவாலானது. இளம் வீரராக கேப்டன்சியைக் கையாள்வது பலருக்கு கடினமாக இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு உறுதியான அனுபவம் தேவை, அதை ரஹானேயிடம் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். கடந்த முறை ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக இருந்தபோது ஐபிஎல் 2024 சீசனை வென்ற கேகேஆர் அணி நடப்பு சாம்பியன்கள். இருப்பினும், அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார், மேலும் அவரை ஏலத்திலும் வாங்க முடியவில்லை” என்று கூறினார்.