16வது ஓவரிலேயே மும்பை அணியை எளிதில் வீழ்த்தி பாய்ண்ட்ஸ் டேபிளில் கொல்கத்தா முதலிடம் பிடித்துவிட்டது.
ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி மும்பை அணியை எதிர்கொண்டது. இதில் தொடர் தோல்வியில் இருந்த தப்பிக்க மும்பை அணியும், முதலிடத்திற்கு செல்ல கொல்கத்தாவுக்கு ஆயத்தமாகின.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 52 ரன்கள் விளாசினார். திலக் வர்மா 38 ரன்களும், பிரேவிஸ் 29 ரன்களும், போலார்டு 22 ரன்களும் அடித்து இருந்தனர்.
20 ஓவரில் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியிலோ தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் மட்டும் 50 ரன்களுடன் கடைசி வரை நிலைத்து நிற்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக வெங்கடேஷ் உடன் கைகோர்த்த பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அணியை 16 ஓவர் முடிவில் எளிதில் வெற்றிபெற வைத்து விட்டார்.
இதன் காரணமாக கொல்கத்தா அணி 4 போட்டிகளில் 3இல் வெற்றி கண்டு டேபிள் டாப்பிற்கு சென்றுள்ளது. மும்பை அணி முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்து கடைசிக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது.
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…