15 ஓவரிலேயே இலக்கை எட்டி பஞ்சாப் அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய நாள் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் கொல்கத்தா அணியும் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 18.2 ஓவர்களுக்கு 137 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராஜபக்சே 31 ரன்கள் அடித்திருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக பந்துவீச்சாளர் ரபாடா மட்டும் களத்தில் இருந்து 25 ரன்கள் அடித்து அவுட்டானார். இறுதியாக 18.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 137 ரன்களை எடுத்திருந்தது பஞ்சாப்.
20 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி தனது இன்னிங்சை ஆரம்பித்தது. இதில் தொடக்க வீரர்களான ரஹானே மற்றும் வெங்கடேச ஐயர் 12 மற்றும் 3 ரன்களில் அவுட்டானர்.
தொடர்ந்து நான்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ தொடங்கியதால் வெற்றி பஞ்சாப் அணி பக்கம் வந்தது. ஆனால் அதற்கடுத்து இறங்கிய சாம் பில்லிங்ஸ் மற்றும் ஆண்ரே ரசல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிபெற செய்தனர்.
அதிலும் ரசல் 31 பந்துகளில் 70 ரன் விளாசி உள்ளார். அதில் 8 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் 141 ரன்களை 15 ஓவரிலேயே கொல்கத்தா அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…